Upcoming Events

Events held

கி.நா. 75 – தமிழ் ஆய்வுத் தடங்கள் – தொடர் நிகழ்ச்சி (2022-2023) –  கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, பேரா. கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர், அரி ஃபவுண்டேசன், கோயம்புத்தூர், பேரா.கி. நா ஆய்வுவட்டம், காரியவட்டம், திருவனந்தபுரம் இணைந்து நடத்தும் தமிழ் மலையாள மொழிபெயர்ப்புகள் ஒப்பாய்வுகள் – ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்
நாள்: 04 ஆகஸ்ட் 2023 (வெள்ளிக்கிழமை)
இடம்: தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம்.
கி.நா. 75 – தமிழ் ஆய்வுத் தடங்கள் – தமிழ் வேதசத்தி மருத்துவப் பேரகராதி – ஆக்கம் – திட்டமிடல் பயிலரங்கம்
கி.நா. 75 – தமிழாய்வுத் தடங்கள் தொடர் நிகழ்ச்சி (2022-2023)
தமிழ் வேதசத்தி மருத்துவப் பேரகராதி – ஆக்கம் – திட்டமிடல் பயிலரங்கம்.
பயிலரங்க நாள்: சனிக்கிழமை, 04-03-2023
இடம் : பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், ‘அரிவாகை’ 10-A, பாலன் நகர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர். 
நிகழ்ச்சி
சனிக்கிழமை,  04-03-2023 தொடக்க விழா: காலை 9.30 மணி
 
தமிழ் வேதசத்தி மருத்துவப் பேரகராதி ஆக்கம் பேரா. கி. நாச்சிமுத்து. முதுநிலை ஆய்வறிஞர், பிரெஞ்ச் கீழ்த்திசை ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
தமிழ் அகராதியியல்: வரலாறும் அமைப்பு முறைகளும் முனைவர் பெ. மாதையன் முன்னாள் பேராசிரியர்(ஓய்வு), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
சித்த மருத்துவக் களத்தின் சமூக மூலப்பொருண்மையியல் கட்டமைப்பும் தகவல் மீட்பும். முனைவர் ச. இராஜேந்திரன் வருகைதரு பேராசிரியர், அமிர்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தமிழ் வேதசத்தி மருத்துவப் பேரகராதி : நோக்கமும் – தேவையும் முனைவர். ந. சண்முகம், இணைப் பேராசிரியர், துறைத் தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்.
சித்த மருத்துவ  நிகண்டுகள்: தேவையும் பயன்பாடும் மருத்துவர் க. மல்லிகா. M.D(s)., பேராசிரியர், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையம்கோட்டை, திருநெல்வேலி.
சிறப்பகராதிகள் உருவாக்கம்: தமிழ்ச் சித்த மருத்துவ அகராதி உருவாக்க முறை முனைவர் பெ. மாதையன் முன்னாள் பேராசிரியர்(ஓய்வு), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
ஆயுர்வேத நிகண்டுகள்: அமைப்பும் பகுப்பும். மருத்துவர். நா. லோகேஸ்வரன், BAMS., கலைகளின் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர்.
தமிழ் மொழியில் இன்று கிடைக்கின்ற மருத்துவம் சார்ந்த சொற்களைத் திரட்டி ஒரு மருத்துவப் பேரகராதி உருவாக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. அந்த பயிலரங்கில் அகராதித்துறை வல்லுனநர்கள், சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பயிலரங்கில் கலந்து கொள்ள ஆரவம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். கட்டணம்: ரூ.200 /- (மதிய உணவு வழங்கப்படும்.) மதிய உணவு, தேநீர் வழங்கப்பெறும்.பேராசிரியர் கி.நா. அவர்கள் அச்சமயம் வெளியிடுகின்ற இரண்டு நூல்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பெறும்.
மேலும் விபரங்களுக்கு : +91 94422 49293, +91 94422 59293. Email: mailtonirlac@gmail.com
கி.நா. 75 – தமிழ் ஆய்வுத் தடங்கள் – வேதசத்தி மருத்துவம் – மந்திர மருத்துவ மொழியியல்

நாள்: 05.03.2023.
இடம் :
அரிவாகை, 10 A, பாலன் நகர், கவுண்டம்பாளையம்,
கோயம்புத்தூர் -641030.

நிகழ்ச்சி
ஞாயிறு,  05-03-2023
தொடக்க விழா: காலை 9.30 மணி

 தமிழ் நூல்களில் மந்திரம் பற்றிய செய்திகள்பேரா. கி. நாச்சிமுத்து.
முதுநிலை ஆய்வறிஞர்,
பிரெஞ்ச் கீழ்த்திசை ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
வேதசத்தி மருத்துவம் – மந்திர மருத்துவ மொழியியல்: உடற்கூறு நோக்கில்முனைவர். ந. சண்முகம்,
இணைப் பேராசிரியர், துறைத் தலைவர், தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்.
மூலிகை மருத்துவமும் மந்திரம் போடுதலும்: ஜவ்வாது மலைப் பழங்குடி வாழ்வியலை முன்வைத்துமுனைவர் ரே. கோவிந்தராஜ்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
ஓங்கார தேகத்தில் மரபியல் ரகசியம்டாக்டர்.ஆ.பரந்தாமன், PhD., FEPA (Paris).,
மரபியல் நோய் வல்லுநர் மற்றும் ஆலோசகர், நிறுவனர்,புகழ் மரபியல் ஆலோசனை மையம்,
திருப்பத்தூர்.
வேதசத்தி மருத்துவம்: யந்திரமும் நோய் நீக்கும் முறைகளும்திரு. சுரேஷ் மனோகரன்,
செயலர், கலைகளின் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர்.
வேதசத்தி மருத்துவம்: தாந்திரிகம் – சமானவாயு – நோய் மாரணம்திருமதி. லதா குமாரசுவாமி,
செயலர், தி பயனியர் பள்ளி, நகர்கோயில்.
Effect of Gayathri Mantram vis – a – vis Sandhyavandanam on cognitive psychologyDr. Shripathi Adiga.H. MD(Ayu).,
Associate Professor (Ayurveda),
Centre for Integrative Medicine and Research, Manipal Academy of Higher Education, Manipal.
மந்திர மருத்துவப் பயன்பாடும் செய்முறைகளும்முனைவர். ந. சண்முகம்,
இணைப் பேராசிரியர், துறைத் தலைவர், தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்.

 

தமிழரின் மருத்துவ முறைகளுள் ஒன்று மந்திர மருத்துவமாகும். இம்மருத்துவத்தை இன்னும் பலர் பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர். இம்மருத்துவம் பல உடற்கூறு நுட்பங்களோடு பொதிந்து செயல்பட்டு வருகின்றது. இத்தகைய ஒரு அரிய மந்திர மருத்துவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கம், இம்மருத்துவத்தின் நுடட்பங்களை அறிந்து கொள்வதற்கும், எளிய மந்திரங்களை கற்றுக் கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

இத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் கட்டணம் – ரூ 500.

மதிய உணவு, தேநீர் வழங்கப்பெறும்.

தொடர்புக்கு : +91 94422 59293, +91 94422 49293.

பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத் தொடர்

பேரா. கி. நாச்சிமுத்து ஐயா அவர்கள் வெளிநாடு பயணங்களை மேற்கொண்டு தமிழகம் திரும்பி உள்ளார். எனவே வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தோறும்  மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றுக் கொண்டிருந்த திருக்குறள் இலக்கண விளக்கம் சொற்பொழிவு, வரும் சனிக்கிழமை 8.10 2022 மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இவ்வாரம் நாற்பத்து எட்டாவது சொற்பொழிவு நடைபெறும்  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம்.

கலந்து கொள்வதற்கான இணைப்பு:-

http://meet.google.com/pbh-mouh-gkv

தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம்

நேரம்: மாலை 6.00 மணி
பொறுப்பாளர்: ஹெப்சி

குறிப்பு:  இந்நிகழ்வில் கலந்துகொள்வோர்  திருக்குறள் பரிமேலழகர் உரையைக்   கையில் வைத்துக்கொள்ளவும்

கி.நா. 75 – தமிழ் ஆய்வுத் தடங்கள் – தமிழ் மருத்துவச் சுவடிகள் பயிலரங்கம்
கி.நா. 75 – தமிழாய்வுத் தடங்கள் தொடர் நிகழ்ச்சி (2022-2023)
தமிழ் மருத்துவச் சுவடிகள்- பயிலரங்கம்.
 
படியெடுத்தல் – பதிப்பித்தல் – சிக்கல்களும் தீர்வுகளும்.
பயிலரங்க நாள்: இரண்டு நாட்கள் (நவம்பர் 12,13 – 2022)
இடம் : பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், ‘அரிவாகை’ 10-A, பாலன் நகர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர். 
 
 
மேலும் விபரங்களுக்கு : +91 94422 49293, +91 94422 59293.
Email: mailtonirlac@gmail.com
 
அதிகபட்சம் 50 பேர் மட்டும்.

கட்டணம்: ரூ.500 /- (இரண்டு நாட்களும் தேநீர் – மதிய உணவு வழங்கப்படும்.) தங்கும் இடம், காலை, இரவு உணவு தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவது அவசியம். (தனிக்கட்டணம் செலுத்தவேண்டும்). பதிவு செய்ய இறுதி நாள்: 03 நவம்பர் 2022.

பயிலரங்கில் கலந்து கொள்வோர்:
தமிழ் மருத்துவ ஆர்வலர்கள், சித்த மருத்துவ ஆர்வலர்கள், ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி, ஆங்கில மருத்துவர்களும் கலந்து கொள்ளலாம். சுவடிக் கல்வி ஆர்வலர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் மொழி பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

PROGRAMME FOR HYBRID TWO-DAY WORKSHOP
IN HONOUR OF PROFESSOR K. NACHIMUTHU

To be held in the library of the EFEO Centre in Pondicherry, at 19, Dumas Street.

Link for those attending from abroad: https://harvard.zoom.us/my/mairewhite?pwd=ZE4wMGhjVXZtck9VWVZOREx1SmdDQT09