கி.நா. 75 தமிழ் ஆய்வுத் தடங்கள்

தொடர் நிகழ்ச்சி (2022-2023)

உலகம் தேடும் தமிழ்

தமிழ் அறிவு மரபுகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

இரண்டு நாட்கள்

23, 24 செப்டம்பர் 2023

( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை)

இடம்:

கலை அரங்கம், தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்

நிகழ்த்து நிறுவனங்கள்

பேரா. கி.நாச்சிமுத்து

மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்,

கோயம்புத்தூர்

அரி ஃபவுண்டேசன்.

கோயம்புத்தூர்

கி. நா. 75 – தொடர் நிகழ்ச்சி (2022-23)

        பேரா. கி. நாச்சிமுத்து அவர்களின் 75-ஆம் அகவைத் தொடர் நிகழ்ச்சியாக, கோயம்புத்தூரிலுள்ள  பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம் பல தமிழ் நிகழ்வுகளையும் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது.

        கி.நா.75 தமிழ் ஆய்வுத் தடங்கள் நிகழ்ச்சி வரிசையின் சார்பில் 2022 நவம்பர் 12-13 இல் நடந்த தமிழ் மருத்துவச் சுவடிகள் பயிலரங்கத்தில் சுவடி பதிப்பித்தல் நெறிமுறைகள் பற்றியும் மருத்துவ நூல்களுக்கு உரை எழுதுதல் பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

        இதன் தொடர்ச்சியாக மருத்துவ நூல்களில் காணப்படும் சொற்பொருளையும் கலைச்சொற்களையும் பரிபாஷைகளையும் மூலிகைப் பெயர்களையும் மருத்துவ முறைகளையும் விளக்கும்  மருத்துவ அகராதிகளையும் உருவாக்கத் தமிழ் வேதசத்தி மருத்துவப் பேரகராதி – ஆக்கம்-திட்டமிடல் பயிலரங்கம் ஒன்று  2023 ஆம் ஆண்டு மார்ச்சு 04 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப் பெற்றது.

        தொடர்ந்து மந்திர மருத்துவம் பற்றி நூல்களில் உள்ள செய்திகளையும்   நடைமுறையில் மந்திர மொழி கொண்டு செய்யும் மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளையும் திரட்டி ஆராய்ந்து  அவற்றை இன்றைய மொழியியல்  ஒளியில் உற்று நோக்கி விளங்கிக் கொள்வதையும் அதன் அறிவியல் தன்மையை மெய்ப்பிப்பதையும் அம்மருத்துவ முறைகளை பயன்பாட்டு நிலையில் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு வேதசத்திமருத்துவ மந்திர மொழியியல் பயிலரங்கம் ஒன்று 2023 ஆம் ஆண்டு  மார்ச்சு 05 ஆம் நாள் நடைபெற்றது.

        கி.நா. 75 தொடர் நிகழ்ச்சியின் இவ்வாண்டு நிறைவு நிகழ்வாக, ‘உலகம் தேடும் தமிழ்-தமிழ் அறிவு மரபுகள்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தவுள்ளது.  பேரா. கி. நா. அவர்களின் நூலின் தலைப்புகளுள் ஒன்று ‘உலகம் தேடும் தமிழ்’ என்பதாகும்.  அதுவே இப் பன்னாட்டுக் கருத்தரங்கின் தலைப்பாக அமைகிறது.

        பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் இன்றும் தமிழ் மொழி, இலக்கியம் பண்பாடு, போன்ற துறைகளில் தொடர்ந்து பணிசெய்து வருகிறார்.  இவர் தமிழை அறிவுக் கருவியாக மாற்ற வேண்டும்; இதற்கு அறிவுள்ள எல்லாத் துறையைச் சேர்ந்த  தமிழனும் தொண்டு செய்யவேண்டும் என இடைவிடாது கூறிக் கொண்டிருப்பவர். 

        பேரா. கி.நாச்சிமுத்து அவர்கள் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் என்ற ஊரைச் சார்ந்தவர்.  கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். பின் அவர் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் திருவாரூர் நடுவண்  பல்கலைக்கழகத்திலும்  தமிழ் மொழித்துறைகளைத் தொடங்கி வளர்த்த பெருமைக்குரியவர்.  இவரது தமிழ்ப் பணியைத் தமிழ் உலகு அறியும்.  இந்தியா மட்டுமல்ல  ஜெர்மனி, போலந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்பொழுது புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

        பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை  2007 ஆம் ஆண்டு பேரா.கி.நாச்சிமுத்து அவர்களின் மணிவிழாக் கொண்டாட்டத்தின் போது இவரிடம் தமிழ்க் கற்ற மாணவர்கள் இவர் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் தொடங்கினர். மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அறிவியல் முதலிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை வெளியிட்டுப் பரப்பும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம் அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டதாகும்.

        இந்நிறுவனம் அரி ஃபவுண்டேஷன், கலைகளின் ஆய்வு நிறுவனம், திருமூலர் வேதசத்தி அகாடமி  போன்ற இணை நிறுவனங்களுடன் சேர்ந்து தன் பணிகளை மேற்கொள்கிறது.

        Prof. K.Nachimuthu Institute of Research for Language and Culture என்பது இந்நிறுவனத்தின் ஆங்கிலப் பெயர். இந்நிறுவனம்  சுருக்கமாக NIRLAC என அழைக்கப்படுகிறது.  இதன் இணையதள முகவரி www.nirlac.org.in ஆகும். இணையதளத்தில் இந்நிறுவனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

 

உலகம் தேடும் தமிழ்

தமிழ் அறிவு மரபுகள்

        தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாகும். இலக்கண, இலக்கிய வளம் கொண்டது. தமிழ் மொழிப் படைப்புகளிலும் தமிழர் பண்பாட்டிலும் பற்பல அறிவு மரபுகள் தொன்றுதொட்டே விளங்கி வருகின்றன. தமிழரின் அறிவு மரபுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இலக்கிய, இலக்கண நூல்கள். இத்தோடு தமிழில் எழுந்த மருத்துவம் வானியல் முதலிய அறிவியல் நூல்கள் வழியாக அறிவு மரபுகள் பலவும் செழித்து வளர்ந்திருக்கின்றன. இவ்வாறு நூல்களிலும் எழுத்து வடிவிலும் பதிவு பெறாமல்  கோயில்கள் அணைக்கட்டுகள் போன்ற பழம்பொருட்கள், நாள்தோறும் புழங்கும் புழங்கு பொருட்கள், உழவு மீன்பிடித்தல் ஆடை அணி செய்தல் முதலிய தொழில் முறைகள், இசைகூத்து நாட்டார் விளையாட்டுகள் போன்றவற்றில் வழங்கிவரும் எண்ணற்ற நாட்டறிவுகள் உள்ளன.

        இத்தகு அறிவு மரபுகளை இன்றும் நாம் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றி வருகிறோம். அறிவு மரபு என்பது பன்னெடுங்காலமாக மக்களால் பின்பற்றப்படுகின்ற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள். அவற்றுள் இன்றைய அறிவியல் நுட்பங்கள் நிறைந்துள்ளன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட சூக்கும நுட்பங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் உள்ளடக்கியவற்றையே நாம்  அறிவு மரபு எனக் கூறுகிறோம். தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்ற அறிவு மரபுகளை உலக மக்களுக்குக் கொண்டு  சேர்ப்பது நம் கடமை. அதன் சிறப்புகள் பிற மொழியாளரையும் தமிழைத் தேடும் நிலையை உருவாக்கும். தமிழ் உலகம் தேடும் மொழியாக உருவாகும். இதுவே இம்மாநாட்டின் அடிப்படை பொருண்மையாக அமைகின்றது.    

        தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகள் அளவில் தோன்றிய தொல்காப்பியம் தமிழ் மொழியின் அடையாளம். தமிழரின் அடையாளமும் தான்.  இந்நூல் பேச்சு மொழி, இலக்கண மொழி, இலக்கிய அமைப்பு ,வாழ்வியல் முறைகள்  முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளது. இந்த இலக்கணத்திற்குரிய தரவுகளை அன்றைய தமிழ் மொழி, பண்பாடு, வாழ்வியல்  சூழல் ஆகியவற்றில் இருந்து தொல்காப்பியர் தொகுத்துள்ளார் என்பது உண்மை. தொல்காப்பியத்துள் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ள கலைச் சொற்கள் பற்பல. அந்தக் கலைச் சொற்கள் ஒவ்வொன்றும் தமிழர் அறிவு மரபில் இருந்து தோன்றியவை என்பது தெளிவு. தொல்காப்பியத்துள் இடம் பெற்றுள்ள கலைச் சொற்களை வைத்துப் பின் தொடர்ந்து வந்த அறிவு மரபுகள் தமிழில் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. சான்றிற்காகச்  சில வருமாறு:

        புவியியல் அறிவு மரபு, காலம் சார் அறிவு மரபு, வானியல் அறிவு மரபு, இசை அறிவு மரபு, யோக அறிவு மரபு, உடலியல் அறிவு மரபு, உயிரியல் அறிவு மரபு, பஞ்ச பூத அறிவு மரபு, தெய்வம்  சார் அறிவு  மரபு, வளி சார் அறிவு மரபு, மந்திர அறிவு மரபு, மூலிகை அறிவு மரபு, நிமித்த அறிவு மரபு, குணம் சார் அறிவு மரபு, கனவு சார் அறிவு மரபு, வாழ்வியல் அறிவு மரபு, மனம் சார் அறிவு மரபு, தொழில் சார் அறிவு மரபு, உணர்வு சார் அறிவு மரபு, சாமுந்திரிகம் அறிவு மரபு, உணவு அறிவு மரபு, போர்க்கலை அறிவு மரபு, அகராதி அறிவு மரபு, நாடக அறிவு மரபு, இலக்கிய அறிவு மரபு, விளையாட்டு அறிவு மரபு, என்பன. இவை அல்லாது மேலும் பற்பல அறிவு மரபுகளின் தரவுகள் தொல்காப்பியத்துள் உள்ளன.

        இவை அனைத்து அறிவு மரபுகளையும்  இக்கருத்தரங்கில் வெளிப்படுத்த முடியாது. இவற்றுள் சிலவற்றை நம் வருங்காலத் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு இக்கருத்தரங்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாது  தமிழ் மொழியும் அறிவு சார் மொழி என்பதை உலகுக்கு வெளிக்காட்டுவதற்கும் இக்கருத்தரங்கம் பாதை காட்டும்.

        “உலகம் தேடும் தமிழ்” தமிழ் அறிவு மரபுகள் என்ற இக்கருத்தரங்கம் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கமாக நடைபெறவுள்ளது.

        இக்கருத்தரங்கில் பின் வருகின்ற தலைப்புகளில் கருத்துரைகள் அமையவுள்ளன.  

1. தமிழரின் வாழ்த்து முறைகள்

திரு. உழவன் மா. தங்கவேலு – துணைத் தலைவர், உலக சமுதாய சேவா சங்கம், ஆழியார்.

2. தமிழும் அறிவுசார் நூல்களும்

திருமதி. லதா குமாரசுவாமி, செயலர், தி பயனியர் பள்ளி, நாகர்கோயில்.

3. தமிழரின் வாழ்வியல் ஒழுக்கங்கள்

முனைவர் மா.ரேணுகா, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பூ சா கோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.

4. சித்தர்களின் அறிவுக் கொடை

முனைவர். அன்பு கணபதி. எம் எஸ் ஸி. பிஹெச்டி.,( நச்சு இயல்) இஎஸ்எம்பி(சித்தா) அன்பு மருத்துவமனை (Integrated Hospital of Siddha ,Yoga,Varma & Allopthy) சென்னை.

5. தமிழரின் சித்த மருத்துவம்

மருத்துவர் க. மல்லிகா. M.D(s)., பேராசிரியர், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையம்கோட்டை, திருநெல்வேலி.

6. யோகம்-ஆன்மீகம்-வாழ்வியல் வெற்றிக்கு-மூலாதாரம் பற்றிய தமிழ் மொழி மரபுசார் சிந்தனைகள்

முனைவர். ந. சண்முகம், இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை,ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்.

7. தமிழர்களின் குழந்தை விளையாட்டுகளும் வேதசத்தி தரும் நன்மைகளும்

அ. நர்மதா. M.sc., M.Phil., Curriculum Designer, Siragukal, Coimbatore.

8. சித்த மருத்துவமும் தற்க அறிவும்

மருத்துவர் ந.வேங்கடப்பன்., M.D(s)., பேராசிரியர், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையம்கோட்டை, திருநெல்வேலி.

9. வேதசத்தி மருத்துவம்-தமிழரின் ஆதி மருத்துவம்

திரு. சுரேஷ் மனோகரன், செயலர், கலைகளின் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர்.

10. தமிழ் அகராதிகளின் தேவையும் பயிற்சியும்

முனைவர் பெ. மாதையன், முன்னாள் பேராசிரியர் (ஓய்வு), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

11. தமிழ் அறிவு மரபை அறிவியலாக மீட்டுருவாக்கம் செய்தல்

திரு. கி. குருவாயூரப்பன். இயந்திரவியல் முன்னாள் மேலாளர், அமிர்தா உயிர் மருத்துவ பொறியியல் ஆய்வு மையம் அமிர்தா பல்கலைக் கழகம். கோயம்புத்தூர்.,

12. வேதசத்தி மருத்துவம்-மந்திர மருத்துவ மொழியியல்

முனைவர். ந. சண்முகம், இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை, ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்

ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் மா.ரேணுகா,

இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.

R.C. கதிரவன். B.E., M.S.
அறங்காவலர், கலைகளின் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர்

 

ஒருங்கிணைப்பு குழு

முனைவர். ந. சண்முகம்,
இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர்.  

Dr.S. யோகநாதன். M.S.(ORTHO).  

முனைவர். S. கண்ணம்மாள்

திரு. அ. கண்ணன்

திரு. ஞா. அருணகிரி

திரு. சுரேஷ் மனோகரன்

திரு. செ. அசோக் குமார்

திரு. ப. ராஜ்குமார்

திரு. சுரேஷ் பொன்னுசாமி

திரு. குழந்தைவேல் ராமசாமி. வர்த்தகத்துறை, Govt of USA.,

முனைவர் CR செல்வக்குமார்.  கனடா.

மீனாட்சி சபாபதி. ஆசிரியை.  சிங்கப்பூர்.

செந்தில் வேலவர். Chief editor, Thinakaran News Paper, Colombo, Sri Lanka.

இரவி சொக்கலிங்கம். பொறியாளர். தமிழ்ஆர்வலர். U.A.E,

மணிமேகலை இராம்மூர்த்தி. இயற்பியல்
துறைப் பேராசிரியர். புளோரிடா,

முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன். வழக்குரைஞர். நியூ
சவுத் வேல்ஸ். ஆஸ்திரேலியா.

பிரபு பேச்சிமுத்து. Solution Architect, U.K.

தமிழ் ஆர்வலர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், தமிழ் மாணவர்களும், பிறதுறை ஆர்வலர்களும் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் கட்டணம் – ரூ 750 /-

கல்லூரி மாணவர்கள் – ரூ 500 /-

மதிய உணவு, தேநீர் வழங்கப்பெறும்.

தொடர்புக்கு C

அலைபேசி :  +91 94422 59293,  +91 94422 49293.

        மின்னஞ்சல்:         mailtonirlac@gmail.com

        வலைத்தளம்:   https://nirlac.org.in/tamil2023

அரிவாகை, 10 A, பாலன் நகர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் -641030.

Registration Link

For Public
https://bit.ly/tmlg23

 

For College Students
https://bit.ly/stml23